மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா? அழைக்கும் ECI நிர்வாகம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா? அழைக்கும் ECI நிர்வாகம்!

நிர்வாகம் : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

கல்வித் தகுதி:

டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் இசிஇ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும்.

சைன்டிபிக் அசிஸ்டெண்ட் 'ஏ' பணிக்கு எலக்ட்ரானிக் இஞ்சினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 31.1.2020 ன்படி, 25 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.19,058 ஊதியம் வழங்கப்படும்.

ஜூனியர் ஆர்டிசன் பணிக்கு 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு 17,316 ரூபாய் ஊதியமாக வழங்கப்படு.

இப்பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம் : ECIL Zonal Office, # 1207, Veer Savarkar Marg, Dadar (Prbhadevi), Mumbai - 400 028

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.