இந்தியத் தொலைத் தொடர்பு நிருவாகம் கடந்த சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது, இதற்கான முக்கிய காரணம் இதன் மலிவான விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்லிங் சேவையை வாங்கியதே. Airtel Puts An End To Call Drops With Free Airtel Wi-Fi Calling

1. ஏர்டெல் வைஃபை காலிங் ஒரு வரப்பிரசாதம்! எப்படி இதை பயன்படுத்தலாம் என்று தெரிஞ்சுக்கோங்க!

இந்தியத் தொலைத் தொடர்பு நிருவாகம் கடந்த சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது, இதற்கான முக்கிய காரணம் இதன் மலிவான விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்லிங் சேவையை வாங்கியதே. ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஒரு படி மேலே சென்று தனது பயனர்களுக்குக் கூடுதல் நன்மைகளை வழங்கியுள்ளது.

.photo-feature-table tr:nth-child(odd) { background-color:#fff!important; } .photo-feature-table tr:nth-child(even) { background-color:#fff!important;}
ஏர்டெல் நிறுவனத்தின் வைஃபை அழைப்பு சேவை

ஏர்டெல் நிறுவனத்தின் வைஃபை அழைப்பு சேவை

ஏர்டெல் நிறுவனம், கடந்த டிசம்பரில் மாதத்தில் உட்புற இணைப்பு சிக்கல்களுக்கான உண்மை தீர்வாக தனது வைஃபை அழைப்பு சேவையை அறிமுகப்படுத்தியது. உண்மையிலேயே இது ஒரு நல்ல தீர்வைக் கொண்டுவந்தது என்று தான் கூறவேண்டு. இந்த சேவை அதன் அனைத்து சந்தாதாரர்களும் கிடைக்கக்கூடிய வைஃபை நெட்வொர்க் மூலம் சிறந்த அழைப்பு இணைப்பை அனுபவிக்க அனுமதிக்கிறது. இதை நீங்கள் அனுபவிக்க உங்களிடம் ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வைஃபை இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.

சமீபத்திய அம்சம் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு வழக்கமான நெட்வொர்க்கிற்கு பதிலாக வைஃபை இணைய இணைப்பைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. மொபைல் நெட்வொர்க் மோசமாக இருக்கும் நேரத்தில் பயனர்கள் தங்களை வைஃபை உடன் இணைத்து அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த சேவையைத் துவக்கத்தில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் பயனர்களை எட்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!

ஏர்டெல் வைஃபை அழைப்பு என்பது மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்குகளை நீக்குவதற்கான சிறந்த கருவியாகச் செயல்படுகிறது. ஏர்டெல் இந்த புதிய சேவையை இலவசமாக வழங்கி வருகிறது, மேலும் பயனர்கள் தங்கள் தற்போதைய மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் வைஃபை அழைப்பின் மற்றொரு நன்மை எச்டி அல்லது வோல்டிஇ குரல் வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகளிலிருந்தும் எச்டி அழைப்புகளைச் செய்வதற்கான வசதியை ஏர்டெல் உங்களுக்கு வழங்குகிறது. உங்களிடம் ஒரு ஏர்டெல் சிம் இருந்தால் மட்டும் போதும்.

FASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா? அப்போ இதை பண்ணுங்க!

ஏர்டெல் வைஃபை காலிங், ஆப்பிள் ஐபோன்கள் முதல் சாம்சங்கின் பல்வேறு சீரிஸ் வரை பல வகையான ஸ்மார்ட்போன்களை ஏர்டெல் வைஃபை காலிங் ஆதரிக்கிறது. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் தவிர, மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் இந்த சேவையை உங்களால் அனுபவிக்க முடியும்.

நீங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் மட்டும் ஏர்டெல்லின் நெட்வொர்க்கில் மட்டுமே வைஃபை அழைப்பை இயக்க முடியும். இணக்கமான ஸ்மார்ட்போன் பட்டியலைக் காண இந்த லிங்க் பயன்படுத்துங்கள் https://www.airtel.in/wifi-calling.

ஏர்டெல் ஜம்மு காஷ்மீர் தவிர, தேசிய அளவில் அனைத்து இடங்களிலும் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் வைஃபை அழைப்பு அனைத்து பிராட்பேண்ட் வழங்குநர்களிடமும் கிடைக்கிறது, அதாவது நீங்கள் ஏர்டெல் பயனராக இருக்கும் வரை, எந்த வைஃபை இணைப்பிலும் சேவையை அனுபவிக்க முடியும்.

இந்த சேவையை பயன்படுத்த முதலில் வோல்ட்-இ ஆக்டிவேட் செய்யுங்கள், Settings >Networks >Airtel SIM >VoLTE. பிறகு Settings > Network Settings > Airtel SIM > Activate Make Calls Using Wi-Fi கிளிக் செய்யுங்கள். உடனே இந்த அம்சத்தை ட்ரை செய்யுங்கள்.